மாகாண மட்ட துடுப்பாட்டப் போட்டி: கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலயம் சம்பியன் (Photos)
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டியில் கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலயம் சம்பியன் மகுடத்தை சூடிக்கொண்டது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது.
இறுதிப்போட்டி
குறித்த சுற்றுத்தொடரில் பலம் வாய்ந்த அணிகளான றிபேக் கல்லூரி, சென்ஜோன்ஸ் கல்லூரி, சோமஸ்கந்தா கல்லூரி மற்றும் மன்னார் கருங்கண்டல் ம.வி ஆகிய அணிகளுடன் மோதி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப்போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி அணியினை எதிர்த்து விளையாடியது.
ஓட்டங்கள்
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நெல்லியடி மத்திய கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்துமாறு கிளிநொச்சி அக்கராயன் ம.வி அணியினை பணிக்க, முதலில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி அக்கராயன் ம.வி அணி நிர்ணயிக்கப்பட்ட 5 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
61 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெல்லியடி மத்திய கல்லூரி அணி நிர்ணயிக்கப்பட்ட 5 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 49 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
தேசிய ரீதியிலான போட்டிக்கு தகுதி
11 ஓட்டங்களால் நெல்லியடி மத்திய கல்லூரி அணியினை
தோற்கடித்து மாகாணத்தின் சாம்பியனாக அக்கராயன் மகாவித்தியாலயம் தெரிவானதுடன்
தேசிய ரீதியிலான போட்டியில் பங்குபற்றவும் தகுதி பெற்றுள்ளது.