கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து: நேரில் சென்று பார்வையிட்டார் டக்ளஸ் தேவானந்தா (Photos)
கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டுள்ளார்.
வைத்தியசாலைக்கு இன்று (21) காலை விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பில் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன், வைத்தியசாலை பணிப்பாளர் சுகந்தன் மற்றும் வைத்தியர்களுடன் விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இதேவேளை குறித்த தீ விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தடயவியல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை முழுமையாக வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரும் இன்று காலை வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியினை பார்வையிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவம் குறித்தும் கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன், வைத்தியசாலை பணிப்பாளர் சுகந்தன் மற்றும் வைத்தியர்களுடன் விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து (PHOTOS)














செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam