கிளிநொச்சியில் பலரை சோகத்தில் ஆழ்த்திய இளைஞர்: வைத்தியர் சத்தியமூர்த்தியின் நெகிழ்ச்சியான பதிவு
கிளிநொச்சியில் தனது செல்லப்பிராணியின் உயிரை காக்க முயற்சி செய்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி மண்ணின் மூத்த ஊடகவியலாளரும் கவிஞருமான விவேக்கின் மகனாகிய வேணிலன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் இறுதியாக தனது தந்தைக்கு அனுப்பிய செய்தி அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பில் பலர் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
முகநூல் பதிவு
அந்தவகையில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாளிதரன் தனது முகநூல் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு வேணிலன் தான் எழுதி தனது தந்தைக்கு வாட்ஸ்அப் செய்த வரிகள்,வாழ்க்கையின் யதார்த்தத்தை வாலிபத்தில் உணர்ந்ததா இவன் உள்ளம் என்று கூறியுள்ளார்.
இதேவேளை வேணிலன் இரக்க உணர்வில் தன்னுயிரை அர்ப்பணித்தவன் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தனது முகநூலில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
இரக்க உணர்வில் தன்னுயிரைக் கொடுத்தான்
அந்த பதிவில்,“தன்னுடைய செல்லப்பிராணியான நாய்க்குட்டியை செல்வம் வளர்த்து வந்தவன். கடந்த வெள்ளிக்கிழமை தனது நாய்க்குட்டி வீட்டுச் புறச் சூழலில் ஓடித் திரிந்தது.
பாதுகாப்பற்ற கிணற்றில் தவறுதலாக விழுந்தவிட்டது.
எப்போதும் அன்பு செலுத்தும் தனது நாய்க்குட்டி கிணற்று நீரில் தத்தளித்த நிலையைப் பார்த்ததும் சிறிதும் தாமதிக்காமல் அயலில் இருந்த மெல்லிய கயிற்றின் உதவியில் கிணற்றில் இறங்கினான்.
ஆபத்து இருக்கிறது என்பதை தெரிந்தும் தனது நாய்க்குட்டியின் நிலை பொறுக்காது பாதுகாப்பான மீட்பிற்கு தாமதிக்காதனால் ஏற்பட்ட விபரீதம்.
கயிறு அறுந்து கிணற்றில் வீழ்ந்துவிட உள்ளிருந்த சேறு காரணமாக அதில் சிக்கிக் கொண்டான்.
அவனுயிர் பிரிந்தது.
அவனது செல்லப் பிராணி உயிர் தப்பிவிட்டது.
இரக்க உணர்வில் தன்னுயிரைக் கொடுத்தான்."என பதிவிட்டுள்ளார்.


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri
