அதிகாரிகளுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் (Photos)
கிளிநொச்சி - கல்மடு நகர் பகுதியில் பொதுமக்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுத்துள்ளனர்.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (19-10-2922) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 6ஆம் திகதி கிராமசேவையாளர் மற்றும் சமூக உத்தியோகஸ்தர் உரிய முறையில் சேவை முன்னெடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மனு கையளிப்பு
அதற்கு பதிலாக இன்று(19.10.2022) நகர் பகுதியில் 250க்கு மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்ட மனு ஒன்றும் கண்டாவளை பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து மக்கள் கையெழுத்திட்ட மனு ஒன்றை கண்டாவளை பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் தமது பகுதியில் சேவையாற்றி வரும் கிராம சேவையாளர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் இருவரும் கடந்த கோவிட் காலத்தில் இரவு பகல் பாராமல் சேவையாற்றியதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாரபட்சமின்றி கடமையாற்றிய அதிகாரிகள்
குறித்த அதிகாரிகள் தற்போதும் மக்களுக்காக பாரபட்சமின்றி கடமையாற்றி வருவதாகவும் ஒரு சிலர் தமது சுயலாப கருதி கடந்த 6ஆம் திகதி போராட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கடந்த 6ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறிய பல விடயங்கள் உண்மைக்குப் புறம்பானது என இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரதேச செயலர் பாரபற்சமின்றி விசாரனைகளை மேற்கொண்டு உரியதீர்வினை
பெற்றுத்தரவேண்டும், என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



