தமிழர் பகுதியில் வீடுடைத்து பெருந்தொகை நகை திருட்டு (Photos)
கிளிநொச்சி திருவையாறு 2 ஆம் பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்களால் 17 பவுன் தங்க நகைகளும் 2 லட்சம் ரூபா பணமும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
திருவையாறு 2 ஆம் பகுதியில் உள்ள கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் என்பவர் வீட்டிற்குள் நள்ளிரவில் நுழைந்த கொள்ளையர்கள் முதியவர்கள் இருவரையும் கட்டி வைத்துவிட்டு பணம் நகைகள் எங்கே என விசாரித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
திருட்டு

பின்னர் வீட்டுரிமையாளரின் மனைவி அணிந்திருந்த சங்கிலி காப்பு உள்ளிட்ட நகைகளையும். இரண்டு இலட்சம் ரூபா பணத்தையும், கொள்ளையிட்டதுடன் வீட்டிலிருந்து தப்பிச் செல்லும் போது கைத்தொலைபேசிகளை எடுத்துக்கொண்டு வீட்டுரிமையாளரின் மோட்டார் சைக்கிளுடன் தப்பிச் சென்றுவிட்டனர்.
தாக்குதலுக்குள்ளான வீட்டுரிமையாளர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி
தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan