அரச பேருந்து சேவையின் கிளிநொச்சி சாலையினர் வேலை நிறுத்த போராட்டம்

Kilinochchi
By Erimalai Aug 07, 2022 07:38 PM GMT
Report

அரச பேருந்து சேவையின் கிளிநொச்சி சாலையினர் நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இன்றைய தினம் 6 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

நான்கு வெவ்வேறு சம்பவங்கள் இன்றுடன் பதிவாகியுள்ளதாகவும், பொலிஸார் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பட்சத்திலேயே தமது சேவையை முன்னெடுக்க முடியும் என கிளிநொச்சி சாலையினர் தெரிவிக்கின்றனர்.

பேருந்தினை மறித்து தாக்குதல் 

அரச பேருந்து சேவையின் கிளிநொச்சி சாலையினர் வேலை நிறுத்த போராட்டம் | Kilinochchi Road Workers State Bus Service Strike

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தை அண்மித்த பகுதியில் 6 பேர் கொண்ட குழுவினர் பேருந்தினை மறித்து சாரதி மற்றும் நடத்துனரை தாக்கியதால் அவர்கள் காயங்களிற்குள்ளாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளபோதிலும், ஏனைய மூவரையும் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்துவதன் ஊடாகவே தமது பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதற்காக நாளைய தினம் கிளிநொச்சி பேருந்து சாலையினால் முன்னெடுக்கப்படும் போக்குவரத்து சேவையை இடைநிறுத்துவதாகவும், 6 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் தமது போராட்டத்தை கை விடுவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

அந்த வகையில் நாளை காலை முதல் குறித்த பணி பகிஸ்கரிப்பில் தாங்கள் ஈடுபடவுள்ளதாகவும், நீதி கிடைக்கவில்லை எனில் ஏனைய பேருந்து சாலையினரும் தமக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US