கிளிநொச்சியில் ஒரு கோடியே 32 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு(Photos)
கிளிநொச்சியில் ஒரு கோடியே 32 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
விசேட போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தை இன்று (17) நடைமுறைப்படுத்தும் வகையில் பொலிஸ் மா அதிபரால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
போதை பொருள் ஒழிப்பு குழு
இந்த பணிப்புரையின் கீழ் இன்று (17) காலை கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பாரதிபுரம் பகுதியில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் மோப்பநாய் சகிதம் தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது சுமார் 68 கிலோவிற்கும் மேற்பட்ட 30 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் வீடு ஒன்றின் கூரை தகடுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
