தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாவட்ட வீரர்கள்
தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தினால் வருடம்தோறும் நடாத்தப்படும் விளையாட்டு விழாவின் இவ்வாண்டுக்கான 36ஆவது தேசிய இளைஞர்கள் விளையாட்டு விழா குழுப் போட்டிகள் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் 36ஆவது தேசிய இளைஞர்கள் விளையாட்டு விழாவின் கபடி போட்டிகள் இம்மாதம் 11,12 ஆம் திகதிகளில் மாத்தறை மாவட்டத்தில் நடைபெற்றது.
தேசிய ரீதியாக இரண்டாம் இடம்
தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட இவ் விளையாட்டு விழாவில் கபடிப் போட்டியில் மொத்தமாக 26அணிகள் பங்குபற்றியதுடன், அப்போட்டியில் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அணி சிறப்பாக விளையாடி தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.

வீரர்களை கௌரவிக்கும் முகமாக கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மற்றும் தேசிய இளைஞர்கள் மன்றம் இணைந்து ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நேற்றையதினம்(27) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேசிய மட்ட கபடிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட கிளிநொச்சி மாவட்ட வீரர்கள் பாண்ட் வாத்தியத்தியத்துடன் மாவட்ட செயலக நுழைவாயிலிருந்து மாநாட்டு மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற கிளிநொச்சி மாவட்ட உதவிப் பணிப்பாளர்,மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,தேசிய சம்மேளன உபதலைவர், இளைஞர் கழக சம்மேளனத்தின் உறுப்பினர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்கள், விளையாட்டு துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.




அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam