கிளிநொச்சியில் வீட்டு திட்ட நிதி முழுமையாக வழங்கப்படாததால் கஷ்டங்களை எதிர்நோக்கும் பயனாளிகள்
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் வழங்கப்பட்ட 686 வீடுகளுக்கான நிதி முழுமையாக வழங்கப்படாத நிலையில் வீட்டுத்திட்ட பயனாளிகள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராம அலுவலர் பிரிவுகளில் மீள் குடியேறியுள்ள குடும்பங்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு இந்த வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இங்கு 686 குடும்பங்களுக்குத் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் கொத்தணி வீட்டுத் திட்டத்தின் கீழ் 283 வீடுகளும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 403 குடும்பங்களுக்கான வீட்டு திட்டங்களும் என்ற அடிப்படையில் மேற்படி வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதற்கான முதற்கட்ட கொடுப்பனவுகள் மாத்திரமே வழங்கப்பட்ட நிலையில் அனைத்து வீடுகளின் கட்டுமானப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இருந்தபோதும் அவற்றை நிறைவேற்றுவதற்கான நிதி வழங்கப்படாத நிலையில் இந்த வீட்டுத் திட்டங்கள் அனைத்தும் இடைநடுவில் கைவிடப்பட்டது. இதனால் இந்த இந்த வீட்டுத்திட்ட பயனாளிகள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றதாக தெரியவருகிறது.
அண்மையில் பெய்த மழையினால் கூட, இவ்வாறான திட்டங்களைப் பெற்றுக் கொண்ட
ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை இங்கு
சுட்டிக்காட்டத்தக்கது.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan