கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற சர்வதேச கண்ணிவெடி தின நிகழ்வு
சர்வதேச கண்ணிவெடி தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் விசேட நிகழ்வு ஒன்று இன்று இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வானது, இன்று (06.04.2024) காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பதில் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
கண்ணிவெடி அகற்றும் செயன்முறை
இந்நிகழ்வில், கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் காட்சிபடுத்தியிருந்த வெடிகுண்டுகளையும் பாதுகாப்பு கவசங்களையும் அமைச்சர்கள் பார்வையிட்டதோடு, கண்ணிவெடி அகற்றும் செயன்முறையும் அங்கே காண்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
