காணிகளை பகிர்ந்தளிக்க கோரிக்கை..
கிளிநொச்சி பூநகரி நல்லூர் கிராம அலுவலர் பிரிலுள்ள சின்னப்பல்லவராயன் கட்டுக் கிராமத்தில் நீண்ட காலம் படையினர் வசமிருந்து அன்மையில் விடுவிக்கப்பட்ட அரச காணியினை அப்பகுதியில் உள்ள காணியற்ற மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமென கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர் கிராம அலுவலர் பிரிவிலுள்ள சின்னப்பல்லவராயன் கட்டு மற்றும் முட்கொம்பன் ஆகிய பகுதிகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இதில் சின்ன பல்லவராயன் கட்டுப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் இதில் 27 வகையான குடும்பங்கள் குடியிருப்புக்குரிய காணிகள் இன்றியும் 42 வரையான குடும்பங்கள் விவசாயக் காணிகள் இன்றியும் வாழ்ந்து வருவதாக சின்ன பல்லவராயன் கட்டு கிராம மட்ட பொது அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் சின்னப்பல்லவராயன் கட்டுப்பகுதியில் நீண்ட காலமாக படையினர் வசம் இருந்த அரசகாணி அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளது குறித்த காணியை பிரதேசத்தில் காணிகள் இன்றி வாழும் குடும்பங்களுக்கு பகிர்ந்தழிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் குறித்த கிராமத்தில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளையும் விடுவித்து பிரதேசத்தில் காணிகள் இன்றி வாழும் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை குறித்த அமைப்புகள் கோரியுள்ளன.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
