மருதானை பொலிஸ் நிலையத்தில் மர்மமாக உயிரிழந்த தமிழ்ப் பெண்! உண்மை தொடர்பில் கேள்வி
கொழும்பு- மருதானை பொலிஸ் நிலையத்தில் உயிரை மாய்த்துக் கொண்டதாக சொல்லப்படும் தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக் கொண்டுவரப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் (P.Ayngaranesan) கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த தமிழ்ப் பெண்ணின் உயிரிழப்பு தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பிலேயே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
அந்தச் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிளிநொச்சியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது நேற்று (22) இறந்துள்ளார்.
உரிய நடவடிக்கை
மருதானை பொலிஸார் இந்த மரணத்தை உயிர்மாய்ப்பு என்று தெரிவித்துள்ளதோடு , கஞ்சா வைத்திருந்ததாலேயே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.
செய்தியறிந்து சடலத்தை பார்வையிட்ட தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் இந்த மரணம் தொடர்பாகச் சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர்.
காலங் காலமாக ஸ்ரீலங்காவில் பொலிஸார் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சோடித்து வந்துள்ளநிலையில், இந்தப் பொலிஸ் நிலைய மரணம் தொடர்பான உண்மை நிலையை வெளிக்கொண்டு வருவதற்கு எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
