கிளிநொச்சியில் பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரம்! ஒன்பது வருடங்களின் பின்னர் வழங்கப்பட்ட மரண தண்டனை
கிளிநொச்சி - பிரமந்தனாறு பகுதியில் பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இத் தீர்ப்பானது இன்றைய தினம் (09.11.2023) கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - பிரமந்தனாறு பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் திகதி மாத்தறை பகுதியைச் சேர்ந்த இராஜசுலோஜனா என்ற பெண்னை வெட்டிப் படுகொலை செய்து கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
மரண தண்டனை
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸார் மற்றும் CID யினர், சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அயலில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்தில் வேலை செய்த மரணித்தவரின் காதலனான எதிரியினை கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் மரணித்தவர் இறுதியாக வைத்திருந்த கைத்தொலைபேசி மற்றும் உடைகள் என்பவற்றுடன் கைது செய்திருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு, பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில வழக்கு தொடரப்பட்டு இன்றைய (09-11-2023) தினம் குறித்த வழக்கானது கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ ஏ. எம் .ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எதிரிக்கு தீர்ப்பு வாசித்துக் காட்டப்படதுடன் எதிரியின் இறுதிக் கருத்தும் கேட்டதை தொடர்ந்து குறித்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பு வழங்கும் போது அனைவரும் எழுந்து நின்றதுடன் நீதிமன்றத்தின் அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்பட்டு நீதிமன்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட முதலாவது மரண தண்டனை தீர்ப்பு இதுவாகும்.
சட்டத்தரணி சுவஸ்திகா விவகாரம்: யாழ்.பல்கலையில் ஆசிரியர் சங்கத்திற்கு எதிராக திரண்ட மாணவர்கள் (Video)
இலங்கையில் தங்க நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்! மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |