கிளிநொச்சியில் சீனாவின் மிகப்பெரும் துறைமுகம்! சவாலாகும் இந்திய இராணுவத்தின் அதிநவீன ஆயுதங்கள்
பாக்குநீரினையில் ஒரு கடற்தளத்தை அல்லது ஒரு துறைமுகத்தை அமைக்கக்கூடிய வசதி கௌதாரிமுனை பகுதியில் இருப்பதாக அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கௌதாரிமுனை பகுதி மக்கள் குறைவாக இருக்கின்ற பகுதி. அந்த பகுதியில் ஒரு துறைமுகத்தை அமைக்கும் வசதி இருக்கிறது. அதனை மையப்படுத்தி தான் கௌதாரிமுனையிலிருந்து பூநகரி வரையான யாழ். கடல் நீரேரி பகுதியினுடைய இரு பக்கங்களிலும் இரால் பண்ணைகளை சீனா உருவாக்கி இருக்கிறது.
சீனா உருவாக்கிய இந்த இரால் பண்ணைகளுக்கான மீன்பிடித்துறைமுகம் ஒன்றை அமைக்கப் போவதாகவும் முதலிலே சொல்வார்கள். அது பின்னால் மிகப்பெரிய துறைமுகமாக வளரக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்படும் அதிநவீன ஆயுங்கள் அவர்கள் கூறுவது போல மிகச்சிறப்பான திறன் வாய்ந்தவை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது ஊடறுப்பு,