கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 இந்திய கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 27ஆம் திகதி எல்லை தாண்டிய நிலையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 8 இந்திய கடற்தொழிலாளர்களை கைது செய்த கடற்படையினர், கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அதன்பின் குறித்த 8 இந்திய கடற்தொழிலாளர்களும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் பாலசுப்ரமணியம் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதையடுத்து குறித்த 8 பேரையும் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடடிருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த இந்திய கடற்தொழிலாளர்களை மன்றில்
முன்னிலைப்படுத்துமாறும் அன்றையதினம் குறித்த வழக்குகளுக்கு குற்றச்சாட்டுப் பத்திரங்களைத் தாக்கல் செய்யுமாறும் கட்டளை இடப்பட்டுள்ளது.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
