நீர்க்களைகளால் பாதிப்பைடையும் மீன்பிடித்தொழிலாளர்கள்
கிளிநொச்சி குளத்தில் வேகமாக பரவி வரும் ஆகாயத்தாமரை மற்றும் சல்வினியா போன்ற நீர்க்களைகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாய நிலை கானப்படுவதுடன் நன்னீர் மீன் பிடித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள கிளிநொச்சி குளத்தில் தற்போது ஆகாயத் தாமரை மற்றும் சல்பீனியா போன்ற நீர்க்களைகளின் பரம்பல் அதிகளவில் காணப்படுகிறன.
கிளிநொச்சிக்கான குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படுகின்ற நீரைப் பெறும் நீர்வளமாக கானப்படும் இக் குளம் ஒரு சுற்றுலா தளமாகவும் நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரமாகவும் கானப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த குளத்தில் நீர் மேற்படி நீர்க்களைகள் அதிகளவில் காணப்படுகின்றன இவ்வாறு காணப்படுவதனால் நன்னீர் மீன் பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |