அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் கிளிநொச்சி விவசாயிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
அரசாங்கமானது விவசாயத்தை நவீனமயப்படுத்துவதாக தெரிவித்துக்கொண்டு விவசாயிகளை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விடும் முயற்சியையே செய்து வருகின்றது என கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை எழுபதாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட விலைகளில் நெல்லை கொள்வனவு செய்யவில்லை. இதன் காரணமாக தனியார் வர்த்தகர்களுக்கு விவசாயிகள் குறைந்த விலைகளில் நெல்லை விற்பனை செய்ய வேண்டிய நிலையில் விவசாயிகள் தொடர் நட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
முரசுமோட்டை, கண்டாவளை, புளியம்பொக்கணை, பரந்தன், பண்ணங்கண்டி, கோரக்கன் கட்டு ஆகிய பகுதிகளிலுள்ள விவசாயிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri