கிளிநொச்சியில் தேர்தல் அலுவலகத்தினை சேதப்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது
கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் தேர்தல் அலுவலகத்தினை சேதப்படுத்திய சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த நபர் இன்று(16.09.2024)கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரச்சார அலுவலகம் கடந்த 10ஆம் திகதி அதிகாலை சேதமாக்கப்பட்டது.
குற்றச்சாட்டு முன்வைப்பு
மேலும், அவற்றின் பொருட்கள் சிலவும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
