கிளிநொச்சி மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரின் ஊடக சந்திப்பு
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளிக்கான வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளீதரன் மற்றும் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வேலாயுதம் சிவராசா ஆகியோர் ஊடக சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு ஏழு அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைக்குழுக்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஒரு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
வேட்பு மனு நிராகரிப்பு
ஆகவே பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு ஏழு அரசியல் கட்சிகளினதும் ஒரு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கரைச்சி பிரதேச சபைக்கு பத்து அரசியல் கட்சிகளும் மூன்று சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
மூன்று அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களும் இரண்டு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏழு கட்சிகள் மற்றும் ஒரு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரோஹினியை தரதரவென இழுத்து வெளியே தள்ளிய விஜயா, என்ன விஷயம் தெரிந்தது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ஹீத்ரோ தீ விபத்தின் பின்னணியில் விளாடிமிர் புடின்... ரஷ்ய சதி குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri

Post Office -ன் 2 வருட சூப்பர் திட்டம்.., ரூ.2 லட்சம் முதலீட்டுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
