கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கிளிநொச்சியில் (Kilinochchi) இரண்டு கிராம் 100 மில்லி கிராம் அளவு கொண்ட ஹெரோயினை உடைமையில் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு (13.06.2024) கிளிநொச்சி மீனாட்சியம்மன் கோவிலுக்கு அன்மித்த பகுதியில் வைத்து பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரகசிய தகவல்
கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் அதிகாரி K.B சானக்க பொலில் உத்தியோகத்தர்களான சமன் பவிதன் குமாரசிறி உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிறுத்தி
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
