மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் குழுவின் தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டம் இன்று (27.10.2023) காலை 9 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், மாவட்டத்தின் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
ஆராயப்பட்ட விடயங்கள்
இன்றைய கூட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அங்கீகாரத்துக்கு வழங்கப்பட்ட செயற்றிட்டங்களுக்கு அனுமதி வழங்கல், மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தை முன்வைத்தல் ஆகியவற்றுடன், பிரதேச மட்டத்திலான பிரச்சினைகளும் ஆராயப்பட்டன.
கடந்த 26.09.2023ம் திகதி இடம்பெற்ற கூட்டத்தின் தொடர் நடவடிக்கைகள் தொடர்பாக துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களில் தடைப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பாக கடந்த கூட்டத்தில் கலந்துரையாடி அறிக்கைகள் பெறப்பட்டன.
இன்றைய கூட்டத்தில் அவற்றை முன்னகர்த்தி செல்லும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டன. சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான கடந்த கூட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
அத்தோடு கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வில் வடக்கு மாகாண சபையின் உள்ளுராட்சி அமைச்சு, விவசாய அமைச்சு, கல்வி அமைச்சு, மகளீர் விவகார அமைச்சு ஆகிய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களின் செயற்றிட்டங்களும் ஆராயப்பட்டன.
முன்மொழியப்பட்டுள்ள திட்டம்
மேலும் வெளிநாட்டு நிதி மூலமான செயற்திட்டங்கள், நீர்வழங்கல் மின்சாரம், போக்குவரத்து, சமூர்த்தி, வீதி அபிவிருத்தி அதிகார சபை, கடற்றொழில் நீரியல்வள திணைக்களம், தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
மேலும் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அதனடிப்படையில், பூநகரிக்குள சூரியகல மின் உற்பத்தி செயற்திட்டம் (United Solar Energy) பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளுர் அபிவிருத்தி உதவித்திட்டத்தின் (LDSP) கீழான வேலைகள் சமர்ப்பிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனுமதி பெறப்பட்டுள்ளன.
இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் எல். இளங்கோவன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்), வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமாகாண அமைச்சு சார்ந்த திணைக்களங்களின் பணிப்பாளர்கள், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள், இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.





நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
