இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளைக்கு புதிய நிர்வாகம்(Photos)
இலங்கை தமிழரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக தெரிவும் நடைபெற்றுள்ளது.
கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பணிமனையான அறிவகத்தில் இன்றைய தினம் (30.08.2023) நடைபெற்றுள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தில்,கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச கிளைகளினதும் நிர்வாகிகள், மாவட்ட மாதர் முன்னணி மற்றும் வாலிபர் முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.

புதிய நிர்வாக தெரிவு
இதன்போது, இலங்கை தமிழரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்ட கிளையின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், செயலாளராக வீரவாகு விஜயகுமாரும், பொருளாளராக அன்பழகி செல்வரட்ணமும், துணைத்தலைவராக வடக்கு மாகாண சபையின் மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜாவும், துணைச் செயலாளராக கரைச்சிப் பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை மாவட்டக் கிளையின் செயற்குழு உறுப்பினர்களாக கலைவாணி சிறீகாந்தன்,குணலக்சுமி குலவீரசிங்கம்,சிவயோகலட்சுமி சந்திரபோஸ், சுபிதா வேலாயுதபிள்ளை, உதயராணி சத்தியசீலன், பரமலிங்கம் பாஸ்கரன்,சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன், கறுப்பையா ஜெயக்குமார், சின்னையா தவபாலன், சுப்பிரமணியம் சுரேன் ஆகிய பத்துப்பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தெரிவு கூட்டத்தை இலங்கைத் தமிழரசு கட்சியின் நிர்வாக செயலாளர் சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகம் நெறிப்படுத்தி நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri