கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான விவசாய குழுக் கூட்டம்
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான மாவட்ட விவசாய குழுக் கூட்டம் மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டமானது, இன்று (10.05.2024) கிளிநொச்சி மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக பயிர்செய்கையினை விரைவாக நிறைவேற்றுவது தொடர்பிலும் கல்மடுக்குளம் குடமுருட்டிகுளம் ஆகியவற்றின் சிறுபோக பயிர்செய்கை தொடர்பாகவும் விரைவாக ஆராயப்பட்டுள்ளது.
விசேட கலந்துரையாடல்
மேலும், கடந்தகால கூட்ட அறிக்கை, நீர்ப்பாசன குளங்களின் தற்போதைய நிலைமைகள், சிறுபோக பயிர்ச்செய்கை, துறைசார்ந்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இதன்போது, பிரதி மாகாண பணிப்பாளர் மாவட்ட விவசாய பிரிவு, நீர்ப்பாசனத் திணைக்களம், விவசாய காப்புறுதி, மாகாண விவசாய திணைக்களம், கமநல அபிவிருத்தி திணைக்களம், விதை ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களின் செயற்பாடுகள் தொடர்பில் திணைக்களத் தலைவர்களுடன் கலந்துரையாடி முடிவுகள் எட்டப்பட்டன.
அதேவேளை, உப உணவு பயிர்செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தீர்மானம் எட்டப்பட்டது.
மேலும், கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட விவசாய பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |