கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மீளாய்வு கூட்டம்(Photos)
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு மீளாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திற்கான விஜயத்தினை இன்று மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.
குறித்த ஒருங்கிணைப்புக் குழு மீளாய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் இவ்வாண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இன்று பகல் 11 மணிக்கு நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட
அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி
பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் திணைக்கள
அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
