கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (206.09.04) காலை கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் வடமாகான ஆளுனர் நாகலிங்கன் வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகியது.
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள், அவற்றின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளன.
ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்ற போது நாடாளுமன்ற உறுப்பினர் அரசன் இராமநாதன் கடற்தொழில் அமைச்சர் ஆகியோரிடையே ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கூட்டம் இன்று ஆரம்பி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது