அனுமதிப்பத்திரமின்றி கால்நடைகளை கொண்டு செல்ல முற்பட்டவர் கைது
கிளிநொச்சி அக்கரையான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முக்கம்பன் பகுதியில் இருந்து பார ஊர்தி ஒன்றின் மூலம் அனுமதி பத்திரம் எதுவும் இன்றி 22 கால்நடைகளை கொண்டுச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், முகமாலை பகுதியில் நேற்று அதிகாலைவேளையில் சோதனை நடத்திய போது இவ்வாறு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து கால்நடைகள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர், கால்நடைகளை கொண்டுச் செல்லப் பயன்படுத்திய பார ஊர்தியின் சாரதியான 43 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுமதிப் பத்திரம் இல்லாமல், கால்நடை வைத்தியரின் அனுமதி இல்லாமல் கால்நடைகளை கொண்டுச் சென்றமை, போதிய இட வசதியின்மை, வழித்தட அனுமதி இல்லாமை போன்ற காரணங்களால் குறித்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்றைய தினம் 24.05.2026 இரவு வேலை கிளிநொச்சி மாவட்ட குற்ற தடுப்புபொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு
மேலும், கைது செய்யப்பட்ட நபரை நாளைய(26.05.2026) தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு கிளிநொச்சி பொலிஸார் தயாராகி வருகின்றனர்.