கிளிநொச்சியில் தந்தை செலுத்திய டிப்பர் மோதி ஒன்றரை வயது குழந்தை மரணம்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.
தந்தை செலுத்திய டிப்பர் வாகனம் மோதியே மேற்படி குழந்தை இன்று(18.04.2025) உயிரிழந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் தவக்குமார் சிந்துஜன் எனும் ஒன்றரை வயது குழந்தையே உயிரிழந்துள்ளது என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
டிப்பர் வாகனத்தின் பின்புறம் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது, அதனைக் கவனிக்காத தந்தை, டிப்பரைப் பின்னோக்கி நகர்த்தியுள்ளார்.
இதன்போது, டிப்பர் மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல் - ராகேஷ்

கிளிநொச்சியில் முகம் சுளிக்கும் செயலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுத்த சுமந்திரன்..! விஜிதாவுக்கு நீதி கிடைக்குமா
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |