கிளிநொச்சியில் வாகன விபத்து - இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு (Photos)
கிளிநொச்சி - பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
பாரதிபுரம் மத்திய வீதியில் எதிரெதிரே பயணித்த மோட்டார் சைக்கிளும், கப் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர்
விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 30 வயதுடைய துரைராசா டிலக்சன் என்னும் இளம் குடும்பஸ்தர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைகளின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விசாரணைகள்
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸார், கப் வாகனத்தின் சாரதியை கைது செய்து, இன்று நீதிமன்றில் முன்னிறுத்தியுள்ளனர்.
குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



மரண வீட்டில் அரசியல்.. 1 நாள் முன்
விஜயா செய்த கேவலமான வேலை, ஆத்திரத்தில் அடிக்க சென்ற அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri