ரஜீவன் கடத்தலில் புதிய திருப்பம்! வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் இனியபாரதி சகாக்கள்
2005-2008 மற்றும் 2009-2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கையின் கிழக்கு மாகாணம் ஒரு கொலைக் களமாக இருந்தது.
இந்த காலப்பகுதியில் அதாவது 16.12.2007 அன்று ரஜீவன் என்ற மாணவன் வீட்டிலிருந்த வேளையில் கடத்திச் செல்லப்பட்டார்.
இதனையடுத்து, தன்னுடைய மகன் கடத்தப்பட்டதாக ரஜீவனின் தாயார் உருத்திரமூர்த்தி ராசவாணி, மறுநாளே பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
குறித்த முறைப்பாட்டில் கருணா குழுவில் இருந்த இனியபாரதியே இந்த கடத்தலுக்கு காரணம் எனவும் ராசவாணி கூறியிருந்தார்.
அந்தக் காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தின் பொலிஸ் நிலையங்கள் கூட ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தன.
இவ்வாறிருக்க, பொலிஸில் சென்று முறைப்பாடு செய்பவர்களை ஆயுதக் குழுக்கள் மிரட்டும் ஒரு போக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்தது.
இது உருத்திரமூர்த்தி ராசவாணிக்கும் விதிவிலக்காக இருக்கவில்லை. இவ்வாறான சூழ்நிலையில், கிடப்பில் போடப்பட்ட ராசாவாணியின் முறைப்பாடு, 2015ஆம் ஆண்டில் மீண்டும் இனியபாரதியை குற்றவாளி என கூறி பதிவு செய்யப்படுகின்றது.
இவ்வாறிருக்க, இனியபாரதியின் சகாக்கள் கடந்த வருடங்களில் அரபு நாடுகளுக்கு தப்பியோடியதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
