ஜூன் 16இல் நடக்கப்போகும் முக்கிய அதிகார பலப்பரீட்சை
எந்தவொரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லாத,கொழும்பு மாநகர சபை உட்பட்ட பல உள்ளூராட்சி மன்றங்களின் ஆரம்ப அமர்வுகளுக்கான திகதிகள் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படுள்ளன.
இதன்படி, கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வு, 2024, ஜூன் 16, முற்பகல் 9:30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
எந்தக் கட்சிக்கும் முழுமையான பெரும்பான்மை கிடைக்காததால், அந்த சபையை யார் கட்டுப்படுத்துவார்கள் என்ற கேள்வி தீவிர அரசியல் ஊகமாக மாறியுள்ளது.
ஆதரவுடன் பெரும்பான்மை
தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தை கைப்பற்றப்போவதாக அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி உட்பட்ட பிற எதிர்க்கட்சி குழுக்களின் ஆதரவுடன் பெரும்பான்மை கூட்டணியை அமைப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஒரு நிலையான நிர்வாகத்தை உருவாக்கக்கூடிய எந்தவொரு குழுவையும் ஆதரிக்க ஐக்கிய தேசியக் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதில், இடம்பெறும் வெளிப்படைத்தன்மை குறித்து சிவில் சமூகக் குழுக்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam