அயோத்தி ராமர் கோவிலை குடும்பத்துடன் தரிசிக்க விரும்பும் தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்
அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று தரிசிக்க விரும்புவதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் கேஷவ் மஹராஜ் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 22ஆம் திகதி அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு மிகவும் பிரம்மாண்டமான முறையில் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையிலேயே, தென்னாபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மஹராஜ் ராமர் கோவிலை தரிசிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

மஹராஜின் நம்பிக்கை
மேலும், தற்போது தென்னாபிரிக்காவின் டர்பன் சுப்பர் ஜயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருவதால், ராமர் கோவில் திறப்பு நிகழ்வுக்கு செல்ல முடியவில்லை எனவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, டர்பன் சுப்பர் ஜயண்ட்ஸ் அணி, லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ் அணியின் துணை அணியாகும். எனவே, ராமர் கோவிலை தனது குடும்பத்துடன் தரிசிக்க லக்னோ அணி ஏற்பாடுகளை மேற்கொள்ளும் எனவும் மஹராஜ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri