குறைந்த வருமானம் பெறுவோருக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை! அமைச்சரிடம் முக்கிய கோரிக்கை
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறுவோருக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
இது தொடர்பில் அவர் இன்றைய தினம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும்,
மண்ணெண்ணெய் விலையேற்றத்தை சமாளிக்கும் முகமாக குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு பணக் கொடுப்பனவுகளை நேரடியாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தமது தினசரி வாழ்வு தேவைகளுக்காக மண்ணெண்ணெயை பயன்படுத்தும் பின்தங்கிய மக்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படுவது வரவேற்கத்தக்கதாகும்.
உறுதிப்படுத்தப்பட வேண்டிய விடயம்

எனினும் இந்த நிவாரணம், மண்ணெண்ணெய்யை தவறாது பயன்படுத்தும் மலைநாட்டு பெருந்தோட்டங்களில் வாழும் பின்தங்கிய மக்களுக்கும், கொழும்பு மாநகரத்தில் வாழும் பின்தங்கிய குடியிருப்பு மக்களுக்கும் வழங்கப்படுவதை கட்டாயமாக உறுதிப்படுத்துமாறு அவர் கோரியுள்ளார்.
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan