மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு: குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிதி நிவாரணம்- கஞ்சன விஜயசேகர
மண்ணெண்ணெய்யை விலை அதிகரிப்பால் பாதிக்கப்படும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், மீன்பிடி மற்றும் பெருந்தோட்டத் துறைகளுக்கு அதற்கு இணையாக நேரடி நிதி நிவாரணத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பதிவொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
Kerosene price revision was a must for many years. One main reason for CPC losses was selling at subsidized prices. With prices now on par with costs the Govt has proposed a direct cash subsidy to low income families, fisheries & plantation sectors that depend on kerosene.
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 22, 2022
மானிய விலையில் மண்ணெண்ணெய்
மானிய விலையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்பட்டமை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நட்டமடைவதற்குரிய ஒரு காரணியாக அமைந்துள்ளது.
அத்துடன், மண்ணெண்ணெய் விலைத் திருத்தத்துக்கான அவசியம் பல ஆண்டுகளாக நிலவி வந்ததாகவும் தமது ருவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நேற்று (21) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றின் விலையை 87 ரூபாவில் இருந்து 340 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதன்படி, மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றின் விலை, பழைய விலையிலிருந்து 253 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இலங்கை வரலாற்றில் மண்ணெண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகூடிய அதிகரிப்பாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.