மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கும் உடன்படிக்கையில் நிதி அமைச்சு கையெழுத்து
இலங்கை திறைசேரிக்கு சொந்தமான 300 மெகாவாட் உற்பத்தியை மேற்கொள்ள கூடிய கெரவலபிட்டிய "யுகதானவி" மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யும் உடன்படிக்கையில் இலங்கையின் நிதி அமைச்சு கையெழுத்திட்டுள்ளது.
முன்னதாக இந்த மின்நிலையத்தின் 51 சதவீதத்திற்கு பங்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் 40 வீதப்பங்குகளை விற்பனை செய்யும் உடன்படிக்கையே கையெழுத்தாகியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டமையை அமெரிக்க நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த உடன்படிக்கையின் படி, அமெரிக்காவை தளமாகக் கொண்ட "நியூ போர்டீஸ் எனர்ஜி" நிறுவனம் (என்.எஃப்.இ) க்கு எதிர்காலத்தில் மிதக்கும் சேமிப்பு மறுசீரமைப்பு பிரிவு, மற்றும் டீசல் மின்சக்தி நிலையங்களுக்கு திரவ இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி) வழங்குவதற்கான குழாய் ஆகியவற்றை நிர்மாணிக்கும் பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், அனைத்து (எல்.என்.ஜி) திரவ வாயு மின் உற்பத்தி நிலையங்களுக்கும் ஐந்து ஆண்டுகளாக எரிவாயு வழங்குவதற்கான உரிமையை அரசாங்கம் அமெரிக்க நிறுவனத்துக்கு (என்.எஃப்.)க்கு வழங்கியுள்ளது.
இதேவேளை இந்த உடன்படிக்கை இலங்கைக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறி, இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
