சொகுசு வாகனத்தில் கேரளா கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது(Photo)
சொகுசு வாகனத்தில் கேரளா கஞ்சா கடத்திய ஒருவர் இன்று(06) அதிகாலை நுரைச்சோலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டியிலிருந்து கொழும்பிற்கு சொகுசு வாகனத்தில் கேரளா கஞ்சா கடத்தி செல்வதாக நுரைச்சோலை பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு
இந்த சுற்றிவளைப்பில் 212 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கற்பிட்டி கொழும்பு பிரதான வீதியின் கரம்பை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் கடற்படையிரின் உதவியுடன் குறித்த வாகனத்தை மறித்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
நீதிமன்ற நடவடிக்கை
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு வேனையும் புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

கேம் சேஞ்சர் ஓடாதுனு முன்பே தெரியும்.. மிகப்பெரிய நஷ்டம்: ஷங்கரை தாக்கிய தயாரிப்பாளர் தில் ராஜு Cineulagam
