ரணிலின் செயற்பாட்டிற்கு கேரள முதல்வர் வாழ்த்து! இலங்கைக்கும் வருவதாக தெரிவிப்பு (Photos)
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் கேளர முதலமைச்சர் பிரனய் விஜயை சந்தித்துள்ளார்.
கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்றைய தினம் (11.09.2023) குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது கேரளாவுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா அபிவிருத்திகளை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து கவனம்
மேலும் 1970ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள மலையக மக்கள் 1480 குடும்பம் கேரளாவில் மீள்குடியேற்றப்பட்டனர். இவர்கள் R.P.L (Rehabilitation Plantation limited) நிறுவனத்திலும், கேரளா வன அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திலும் தொழில்புரிகின்றனர்.
அவர்கள் எதிர்கொள்ளும் பிர்சசினைகளுக்கு தீர்வுகாண்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
சனல் 4வை விடுதலைப் புலிகளுடையது அல்லது வெள்ளைப் புலிகளுடையது என முத்திரை குத்துவார்கள்: யாழில் மக்கள் காட்டம்
இதேவேளை இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துவரும் பணிகளுக்கு கேரள முதல்வர் பிரனய் விஜயன் வாழ்த்துக் கூறியதுடன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கைக்கு வருகை தருமாறு விடுத்த அழைப்பை ஏற்று இலங்கை வருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan