நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: நீர்நிலைகளின் நீர்மட்ட அளவில் அதிகரிப்பு
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்த கடும் மழை காரணமாக பல நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனி கங்கையில் (Kelani Ganga) நிறுவப்பட்டுள்ள நீர்மானியின் அளவீட்டுக்கமைய, இன்று (19.05.2024) 91.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்நிலையில், களனி கங்கைக்கு அருகிலுள்ள ஹங்வெல்ல நீர்மானியின்படி, 77.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள அதேவேளை, கொழும்பில் (Colombo) நிறுவப்பட்டுள்ள நீர்மானியில் 58.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதிக மழைவீழ்ச்சி
அதேவேளை, களுகங்கைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நீர்மானியில் 51.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் கலவெல்லவ மில்லகந்தவில் 45.9 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிங் (Gin) கங்கையை அண்மித்துள்ள பத்தேகமவில் 63.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் தவலமவில் 21.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் மாதுரு ஓயாவை அண்மித்த பதியத்தலையில் மழைவீழ்ச்சி 61.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் கண்டறியப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி, மகாவலி (Mahaweli) ஆற்றின் கரையோரமாக உள்ள வேரகங்தோட்டையில் 55.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் மா ஓயா, யக்கா ஏரியில் 54 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 21 மணி நேரம் முன்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri