“எனக்குத் தெரியாது! என் மனைவியிடமே கேட்க வேண்டும்” கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் கெஹெலியவின் பதில்
மிரிஹானவில் நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் அமைசர்களான பிரசன்ன ரணதுங்க, திலும் அமுனுகம, கெஹெலிய ரம்புக்வெல ஆகியோர் கலந்து கொண்டு சம்பவம் தொடர்பான விளக்கங்களை வழங்கியிருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் சமையல் எரிவாயு வரிசை பிரச்சினை நாட்டில் எப்படி இருக்கிறது என ஊடகவியலாளரொருவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
குறித்த கேள்விக்கு அமைச்சர் கெஹெலிய பதிலளிக்கையில், எரிவாயு வரிசையின் நிலைமை பற்றி எனக்குத் தெரியாது, எரிவாயு தொடர்பில், எனது மனைவியிடமே கேட்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரின் இந்த கருத்தானது சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
நாட்டில் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் பதவியில் உள்ள ஒருவரின் இவ்வாறான பதிலானது மக்களை மேலும் ஆத்திரப்படுத்தும் செயல் என சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
