திரிபோஷவில் உள்ளடங்கியிருக்கும் புற்றுநோய் காரணி! உண்மையை வெளிப்படுத்திய கெஹெலிய
குழந்தைகள் மற்றும் தாய்மாருக்கு வழங்கப்படும் திரிபோஷ உணவில் எஃப்லடொக்சின் எனும் புற்றுநோய் உண்டாக்கும் நச்சுப்பொருள் உள்ளடங்கியிருப்பதாக பகிரப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை
அவர் மேலும் கூறுகையில், “ திரிபோஷ உணவில் புற்றுநோய் உருவாக்கும் நச்சுப்பொருள் இருக்கின்றது என்பது முற்றிலும் பொய்யான விடயம் என்பதை மிகுந்த உத்தரவாதத்துடன் நாடாளுமன்றத்தில் கூறுகின்றேன்.
இந்த பிரச்சினைகளுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நான் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தல்
இது மிகவும் அசாதாரண செயல். புற்றுநோய் உருவாக்கும் நச்சுப்பொருள் இருப்பதாக கூறி சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடு.
ஒருவருக்கு இடம்பெற்ற சம்பவத்தை வைத்து அனைத்தையும் கணக்கிட கூடாது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.