கெஹல்பத்தர பத்மே உட்பட்டவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இந்தோனேசியாவில் இருந்து அழைத்து வரப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தடுப்புக் காவலில் உள்ள உறுப்பினர்களான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் பாணந்துரே நிலங்க ஆகியோரை விசாரிக்க மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முக்கியமான தகவல்கள்
ஏற்கனவே மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெகோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பல முக்கியமான தகவல்களை அதிகாரிகள் வெளிக்கொண்டு வந்துள்ளனர்.
எனினும், இந்த விசாரணைகளுடன் தொடர்புடைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் உள்ள குறித்த மூவரையும் இதுவரை விசாரிக்க முடியாததால், விசாரணை வேகம் பாதிக்கப்பட்டது.
இது தொடர்பில், பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மூவரையும் விசாரிக்க தேவையான அனுமதி வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



