தொடரும் பேருந்து சாரதிகளின் அலட்சியம்: தட்டிக் கேட்ட பயணிக்கு சாரதி அளித்த பதில்...!
நாட்டில் தினமும் விபத்துக்கள் காரணமாக பல உயிர்கள் பலியாகின்றன.
இந்த வீதி விபத்துக்களுக்கு சாரதிகளின் கவனயீனமும் ஒரு முக்கிய காரணியாக அமைகின்றது.
அதாவது வேறு பேருந்துகளை அல்லது வாகனங்களை முந்தி செல்வதற்காக அதிக வேகமாக வாகனத்தை செலுத்தல்,வாகனம் செலுத்தும் போது போதை பொருட்களை பயன்படுத்தல் மற்றும் தொலைபேசி பயன்படுத்தல் என சாரதிகளின் கவனயீனமான செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
அண்மையில் எல்ல-வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து, பேசுபொருளாக மாறிய நிலையில் தற்போது சாரதிகளின் நடவடிக்கைகள் குறித்து பொது மக்கள் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், பேருந்து சாரதி ஒருவர் தொலைப்பேசியை பயன்படுத்தி கொண்டு பேருந்து செலுத்தியுள்ளார்.
அதனை தட்டி கேட்ட பயணியிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகின்றது.




