கெஹெல்பத்தரவுக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான கெஹெல்பத்தர பத்மேவை, பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்ற புலனாய்வு திணைக்களத்தை விட்டு கெஹெல்பத்தர வெளியே அழைத்து செல்லப்பட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி வரை கெஹெல்பத்தர திணைக்களத்திற்கு வெளியே அழைத்து செல்லாமல் இருப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அனுமதியும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
உயிர் அச்சுறுத்தல்
தற்போது காவலில் உள்ள கெஹெல்பத்தர பத்மேவின் தாயார், தனது மகனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உத்தரவைக் கோரி தாக்கல் செய்த ரிட் மனு, நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான துணை சொலிசிட்டர் ஜெனரலின் ஒப்புதலுடன் இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.