பாடசாலைக்கு கெஹெலியவின் பெயர்: எழுந்துள்ள சர்ச்சை
பாடசாலை ஒன்றுக்கு கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக நீக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் இன்று(07.02.2024) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் சுற்றறிக்கை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கண்டி மாவட்டத்தின் குண்டசாலை பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அந்த பெயரை உடனடியாக நீக்க வேண்டும். கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
1996ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் உயிருடன் உள்ள ஒருவரின் பெயரை பாடசாலைக்கு பெயரிட முடியாது.
ஆனால் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சமூகத்திற்கு தவறான ஒரு முன்னுதாரணம். எனவே குண்டசாலை பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலைக்கு கெஹெலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலை என பெயரிட்டுள்ளார். அதனை உடனடியாக நீக்குங்கள்.
குறிப்பாக உயிருடன் இருக்கும் ஒருவரின் பெயரை பாடசாலைகளுக்கு வைப்பதற்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
