கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டமைக்காக காரணம் வெளியானது!
பிரித்தானியாவின் ஆடை உற்பத்தி நிறுவனமான நெக்ஸ்ட், கட்டுநாயக்கவில் இயங்கி வந்த தமது தொழிற்சாலையை, திடீரென மூடியமைக்கான காரணத்தை வெளியிட்டுள்ளது.
அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகள் காரணமாக, தமது தொழிற்சாலை பல ஆண்டுக்காகவே, இலாபமற்ற நிலையில் இயங்கி வந்ததாக, நெக்ஸ்டின் உற்பத்தித்துறை பணிப்பாளர் டேவிட் ரே தெரிவித்துள்ளார்.
தொழிற்சாலைகள்
எனவே இந்த தொழிற்சாலையை மூடுவது தவிர்க்க முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கையில் உள்ள தமது மேலும் இரண்டு தொழிற்சாலைகள் தொடர்ந்தும் இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையை அடுத்து, தமது தொழில்களை இழந்துள்ள 1,400 தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக மண்டலத்தில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை, கடந்த செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.
ஆலோசனை
அத்துடன் ஒரே இரவில் தொழில்களை இழந்த 1,416 ஊழியர்களுக்கு பணிநீக்கப் பொதிகளை வழங்குவதாகவும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
எனினும், ஆலோசனை இல்லாமல் மூடப்பட்டது ஒரு கூட்டு ஒப்பந்தத்தை மீறுவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
இலங்கையின் ஆடைத்தொழில்துறையில் சுமார் 350,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்த தொழில்துறை மூலம், கடந்த ஆண்டு 4.76 பில்லியன் டொலர் வருமானத்தை இலங்கை பெற்றுக்கொண்டது.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri

சீனாவிற்கு கிடைத்த பேரிடி... ஐபோன் 17 உற்பத்தியை இந்த நாட்டிற்கு மாற்ற ஆப்பிள் திட்டம் News Lankasri
