நாட்டில் அதிகரிக்கும் தென்மேற்கு பருவ மழை!
காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதேவேளை வடமத்திய மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் அபாயங்களை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
ட்ரோன்கள் அத்துமீறும்... நிம்மதியாக உங்களைத் தூங்க விடாது: ஐரோப்பாவிற்கு ரஷ்யா மிரட்டல் News Lankasri
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri