அவசரமாக திருப்பிவிடப்பட்ட விமானங்கள்! இயல்புநிலைக்கு திரும்பும் செயற்பாடுகள்
மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட இடையூறுகளை தொடர்ந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (22) காலை பெய்த கனமழையால் கட்டுநாயக்கவில் தரையிறங்கவிருந்த ஏழு விமானங்கள் ஏனைய விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டிருந்தது.
இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள செயல்பாடுகள்
தரையிறங்கும் போது பாதுகாப்பாக இருக்கும் வகையில் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, திருப்பிவிடப்பட்ட விமானங்களில் ஐந்து மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாகவும் சிவில் விமானப்போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், கேப்டன் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இனையடுத்து மீதமுள்ள இரண்டு விமானங்கள் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு, குறிப்பாக மதுரை மற்றும் கொச்சிக்கு திருப்பிவிடப்பட்டன.
இந்நிலையில், தற்போது கட்டுநாயக்கவில் நிலைமைகள் மேம்பட்டுள்ளதாகவும், விமான நிலைய செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பிவருவதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து திணைக்களம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
டொலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள தாக்கம்! வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்