கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழையும் மர்ம கும்பல் - அநுர அரசுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட சிரேஷ்ட மற்றும் அனுபவமிக்க சுங்க அதிகாரிகள் குழுவை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருட்கள், வெளிநாட்டு சிகரட்டுகள், சட்டவிரோத மதுபானங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை நாட்டுக்குள் கடத்த முயற்சித்ததை வெற்றிகரமாக முறியடித்து, அரச வருமானத்தை பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அதிகாரிகளே இவ்வாறு மாற்றப்படவுள்ளனர்.
அண்மையில் பதவியேற்ற சுங்கப் பணிப்பாளர், சில சுங்க தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் குறுகிய நோக்கங்களைக் கொண்ட சில நபர்களின் அழுத்தங்களே இதற்கு காரணமாக கூறப்படுகின்றது.
முக்கிய நோக்கம்
அத்துடன் திசை திருப்பல்கள் காரணமாக இந்த இடமாற்றங்களுக்கான பின்னணி தயாரிக்கப்பட்டு வருவதாக சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அண்மைக் காலமாக பெருமளவிலான கடத்தல்காரர்களை சட்டத்தின் பிடியில் சிக்கவைத்து மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்த அதிகாரிகள் செயற்பட்டுள்ளனர்.
குறித்த அதிகாரிகளை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்துவிட்டு, அதற்குப் பதிலாக இதற்கு முன்னர் பல்வேறு வணிக மற்றும் தனிப்பட்ட உறவுகளுடன் செயற்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட சில அதிகாரிகளை மீண்டும் இந்த பதவிகளில் நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

கடந்த காலங்களில் விமான நிலையத்திற்குள் செயற்பட்ட ஊழல் முறைகள் மற்றும் சட்டவிரோத கடத்தல்களுக்கு மீண்டும் இடமளிப்பதே இந்த நடவடிக்கை பின்னணியில் உள்ள முக்கிய நோக்கமாக இருக்குமா என்ற வலுவான சந்தேகமும் எழுந்துள்ளது.
அரச வருமானத்தை அதிகரித்தல், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் அரச நிறுவனங்களுக்குள் நிலவும் ஊழலை ஒழித்தல் என்பவற்றுக்கு தற்போதைய அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகின்றது.
இவ்வாறான பின்னணியில், இடம்பெறவுள்ள இவ்வாறான இடமாற்றங்களால் ஒட்டுமொத்த சுங்க அமைப்பின் நேர்மையான அதிகாரிகளின் சேவை ஊக்கம் வீழ்ச்சியடையக்கூடும் எனத் துறைசார் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
you may like this..
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam