குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 40 பேர் காத்தான்குடி பொலிஸாரால் கைது
மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 42 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போதே இன்று (26) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்லடி,நாவற்குடா, ஆரையம்பதி, புதிய காத்தான்குடி புதுக்குடியிருப்பு உட்பட்ட இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலதிக விசாரணை
இதன் போது, சகிப்பு உற்பத்தி செய்த ,மற்றும் விற்பனை செய்த 28 பேரும்,கேரள கஞ்சாவை வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த,கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 18 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஐஸ், கேரள கஞ்சா, கசிப்பு போதை பொருள், சிகரட்கள், சகிப்பு தயாரிப்பு உபகரணங்கள்,எரிவாயு சிலிண்டர் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இதே நேரம் சட்டவிரோத முறையில் மணல் ஏற்றி வந்த ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



