காத்தான்குடியில் கோவிட் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கோவிட் தொற்று உறுதி
மட்டக்களப்பு - காத்தான்குடி கோவிட் பிரிவு பொறுப்பதிகாரிக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவிட் வைத்தியசாலையில் நேற்று(14) அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு சுகாதாரத் துறையினரால் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்ற நிலையில் காத்தான்குடி பொலிஸ் நிலைய கோவிட் பிரிவு பொறுப்பதிகாரிக்கு எடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரை கொரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அந்த பிரிவிலுள்ளவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அந்த பிரிவிலுள்ள பகுதிகளுக்குத் தொற்று நீக்கி வீசுறும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
