புற்றுநோய் பாதிப்பை அறிவிக்க தயங்கிய கேட் மிடில்டன்: வெளியான காரணம்
இளவரசி கேட் மிடில்டன் தமது புற்றுநோய் பாதிப்பை வெளிப்படையாக அறிவிக்க தாமதப்படுத்தியதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
தமது மூன்று பிள்ளைகளிடமும், குறித்த நோய் தொடர்பில் விளக்கி அவர்களுக்கு புரியவைக்க கேட் மிடில்டன் தயாராவதற்கே தாமதமானதாக கூறப்படுகிறது.
அறுவை சிகிச்சை
மேலும், தாம் நோயில் இருந்து மீண்டு வருவேன் என்று தமது மூன்று பிள்ளைகளுக்கும் நம்பிக்கை அளிக்க போதுமான கால அவகாசம் தேவைப்பட்டதாகவும், தமது பிள்ளைகளுக்கு தாம் மீண்டு வருவேன் என்பதை புரிய வைப்பதே சவாலாக இருந்தது என கேட் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே கேட் மிடில்டன் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை என்பதுடன், திடீரென்று வயிற்றில் அறுவை சிகிச்சை முன்னெடுக்கப்பட்டதும் பொதுமக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அத்துடன் அவர் அன்னையர் தினத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்றும் திருத்தப்பட்ட விவகாரத்தில் சிக்கி, சர்வதேச ஊடகங்களில் அரண்மனை தகவல்கள் நம்பகத்தன்மையை இழக்கச் செய்திருந்தது
இந்நிலையிலே பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் முன்னர், தமது பிள்ளைகள் அறிந்து கொள்ள வேண்டும் என கேட் மிடில்டன் உறுதியுடன் இருந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
